காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் உணவு இடைவேளையை பெறுவதற்காக அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த பிறகு சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்ததாகவும் அவர் கூறுகிறார்.
அந்தப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது உடனிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேருந்துகளின் ஏற்பாட்டாளர்கள் தொடர்பான ஆவணத்தினையும் கோரியுள்ளதாக தெரிவித்தார்.