உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாக தேசிய உப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எடுத்த நடவடிக்கையின் பலனாக கடந்த வியாழக்கிழமையிலிருந்து நாட்டுக்கு உப்பு வரத் தொடங்கி உள்ளது. சுமார் 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்குத் தேசிய உப்பு கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது.
இறக்குமதியாகும் உப்பு தொகுதியைச் சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம், உப்பு பற்றாக்குறை முடிவுக்கு வருமென்றும் மேலும் உப்பின் விலைகள் குறைவடையும் என்றும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், லங்கா உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து மேலும் 10,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த உப்பு நாட்டை வந்தடையவுள்ளது.