கேரளா வயநாடு நிலச்சரிவின் பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 1000 பேர் மீட்பு, மேலும் 166 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது.
75 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள பொலிஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.