இன்று (11)அதிகாலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,
இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் விபத்தில் 59 நபர்கள் காயமடைந்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.