யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வை பார்வையிட வருகைத்தந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதுடன், குறித்த இசைநிகழ்ச்சி சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.