மறைந்த திரையுலக நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நேற்று சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது.
இதில் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து பூதவுடல் அக்னியுடன் சங்கமமாகியது.