BREAKING

உள்நாட்டு செய்தி

நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்

நானுஓயா - பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம்

(செய்தியாளர் செ.திவாகரன்)

நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானு ஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியாளர் தனுஷ்கா ஆகியோரின் தலைமையில் குறித்த ஆரம்ப நிகழ்வு சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா முதல் பதுளைக்கான ரயில் சேவை தூரமானது 85 கிலோமீட்டர் கொண்டதும் சுமார் 3 மணித்தியாலயமும் 15 நிமிடங்கள் எடுக்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது .

‘டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதங்களால் இந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் இதற்கு முன்னர் பதுளையிலிருந்து அம்பேவெல வரையிலான பகுதிகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன இதற்கமைய, இன்று (20)சனிக்கிழமை முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினசரி 4 ரயில் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவையில் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து பயணத்தை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!