BREAKING

உள்நாட்டு செய்தி

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஸவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஸவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவில் விமானங்களை கொள்முதல் செய்யும்போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால்  இன்று (04) கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!