மட்டக்களப்பு கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் விபத்து

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.

இப் படகுகள் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலினுடையது எனத் தெரிகிறது. இச் சம்பவம் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரு படகுகளே விபத்துக்குள்ளானது.

இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் உயிர் ஆபத்து இல்லாமல் மீட்டெடுக்கப்பட்டுள்ளளனர்.

அவர்கள் சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் மீட்கப்பட்டதோடு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலீசாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே ச‌ம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலீசார் விடயத்தை கேட்டறிந்தனர்.

விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.

Exit mobile version