நேற்று பிடியாணை பிறப்பிக்கப்படடவர் இன்று சடலமாக மீட்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச, ஊழல் வழக்கில் சந்தேகநபராக கபில சந்திரசேன பெயரிடப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவரை மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version