BREAKING

உள்நாட்டு செய்தி

ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்துக்களை பகிர்ந்தார்

ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்துக்களை பகிர்ந்தார்

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.


இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.

வலுவான இந்திய – இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார். 🤝

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!