BREAKING

விளையாட்டு

பிரித்தானியாவில் 14 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள

பிரித்தானியாவில் Dartford கரப்பந்தாட்ட கழகத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இவ்வருடம் 14 ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி நிகழ்வு எதிர்வரும் 05/03/2023 ஞாயிற்றுக்கிழமை Southall இல் உள்ள Domers wells leisure centre, Southall, UB1 3JB இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியானது 5A-side, 4A-side என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளதுடன், பங்குபற்ற ஆர்வமுள்ள கழகங்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் 14 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி | Uk Dartford Volleyball Tournament 2023பரிசு விபரங்கள்

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான பதிவு கட்டணத்தினை 27/02/2023 திங்கட்கிழமைக்கு முன்னர் செலுத்தி கழகங்களின் பங்குபற்றுதலை உறுதிப்படுத்துமாறு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 14 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி | Uk Dartford Volleyball Tournament 2023

இந்த போட்டியில் வெற்றிபெறும் 1 ஆவது, 2 ஆவது,3 ஆவது கழகங்களிற்கு அணிக்கான வெற்றிக்கிண்ணமும், அணி வீரர்களின் கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும், தனிப்போட்டிகளில் தெரிவு செய்யப்படும் போட்டி நாயகர்களுக்கான வெற்றி பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!