மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான 212 ரக உலங்குவானூர்தியில் இருந்து மீட்கப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் விமானப்படையின் உலங்குவானூர்தி துப்பாக்கிதாரிகள் இருவரும், இராணுவ சிறப்பு படையைச் சேர்ந்த மூவர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உலங்குவானூர்தியில் இரு விமானிகள் உட்பட 12 பேர் பயணித்தனர்.