BREAKING

வெளிநாடு

ரியாத் மற்றும் தோஹாவை இணைக்கும் அதிவேக மின்சார பயணிகள் ரயில் பாதை

ரியாத் மற்றும் தோஹாவை இணைக்கும் அதிவேக மின்சார பயணிகள் ரயில் பாதை

வளைகுடா நாடுகளின் தலைநகரங்களான ரியாத் மற்றும் தோஹாவை இணைக்கும் அதிவேக மின்சார பயணிகள் ரயில் பாதையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவும் கத்தாரும் திங்கட்கிழமை (08) கைச்சாத்திட்டன. சவுதி நகரங்களான அல்-ஹோஃபுஃப் மற்றும் தமாம் ஆகியவையும் இந்த வலையமைப்பில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த ரயில் மணிக்கு 300 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தை எட்டும், மேலும் இரு தலைநகரங்களுக்கும் இடையே பயணம் சுமார் இரண்டு மணிநேரம் ஆகும். இதேவேளை, இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமானம் சுமார் 90 நிமிடங்களாகும்.

குறித்த திட்டம் ஆறு ஆண்டுகளில் நிறைவடையவுள்ளதுடன் ஆண்டுக்கு 10 மில்லியன் பயணிகளுக்கு சேவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!