இந்த வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது, இருப்பினும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்த நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் சமீபத்திய நாட்களில் வான் மற்றும் கடற்படை தாக்குதல் விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குவிந்துள்ளதால், வார இறுதிக்குள் இராணுவம் தாக்குதலுக்கு தயாராக இருக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஈரான் தனது பல அணுசக்தி நிலையங்களை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.








