BREAKING

உள்நாட்டு செய்தி

35 ஆண்டுகளுக்குப் பின் வசாவிளான் – பலாலி வழியாக அரச பேரூந்து பயணம் மீண்டும் ஆரம்பம்

35 ஆண்டுகளுக்குப் பின் வசாவிளான் - பலாலி வழியாக அரச பேரூந்து பயணம் மீண்டும் ஆரம்பம்

35 ஆண்டுகளுக்குப் பின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் – பலாலி வழியாக, பருத்தித்துறை – அச்சுவேலி இணைப்பு வழியே, யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கிய அரச பேரூந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு யாழ் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. வசாவிளான் சந்தியில் ஊர்மக்கள் ஒன்று கூடி, பால் காச்சி பேருந்து சேவையை வரவேற்று கொண்டாடினர்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா, CTB வடக்கு மாகாண முகாமையாளர் திரு கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் முகாமையாளர் திரு குணசீலன், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் இணைப்பாளர் திரு வாகீசன், CTB ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!