BREAKING

உள்நாட்டு செய்தி

500 ரூபா கையூட்டல் பெற்ற அரச அதிகாரி கைது

500 ரூபா கையூட்டல் பெற்ற அரச அதிகாரி கைது

மருதமுனையை சேர்ந்த வியாபாரி ஒருவரின் மகளின் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொளவதற்காக  அக்கரைப்பபற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பதில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் 1000/- ரூபாவை இலஞ்சமாக கேட்டுள்ளார் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதில் 500/- ரூபாவை குறித்த நாளிலும்,மிகுதி 500/- ரூபாவை சான்றிதழை பெற வரும்போது கொண்டுவருமாறு சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த பதிவாளரின் வீட்டில் நடாத்தப்படும் அலுவலகத்தில் குறித்த பணத்தினை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (16)கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!