BREAKING

வெளிநாடு

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்

தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழா மேடையில் ஜோசப் விஜய் எனும் நான்… என விஜய் கூறியவுடன் அரங்கம் நிறைந்துள்ள தொண்டர்கள் அமோக கரகோசங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதேவேளை,புதிய தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் முதலமைச்சரானதுமே 3 முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல், 200 அலகுகளுக்கான இலவச மின்சாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்குவதற்கான ஆவணத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த விஜய் தமிழ்நாடு தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்பதை பகிரங்கமாக அறிவித்த பின்னர் தமது பணியை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருளை கட்டுப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!