மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான உதவி

சம்மாந்துறை மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசலில், பெண்கள் தராவீஹ் தொழுகைக்காக மேல் தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்குத் தேவையான 20 சீமெந்து பைகளை வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தனது சொந்த நிதியில் 20 சீமெந்து பைகளை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அஹமட் உட்பட பள்ளி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version