ஊடகவியலாளர்களுக்கு உபகார பெகேஜ் சலுகை

ஜனாதிபதியின் பணிப்புரையில் மொபிடெல் உபகார பெகேஜ் சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை,அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த நன்மை வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இதன் பயனை அனைவருக்கும் வழங்குமாறும், அந்த சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி,மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version