BREAKING

உள்நாட்டு செய்தி

எரிபொருள் விலை குறைப்பு – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

எரிபொருள் விலை குறைப்பு - பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

மேலும் ஓட்டோ டீசல் லீட்டர் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது,புதிய விலை 333 ரூபாவாகும்.மற்றும் சுப்பர் டீசல் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணெய் லீட்டர் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதனால் அதன் புதிய விலை 215 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!