புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது, கொழும்பிலிருந்துகொண்டு கிராமங்கள் பற்றிய தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனவும், கட்டமைப்புக்குழுக்கள் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாகத் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும்,கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடன் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஹம்பாந்தோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நேற்று (12) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.









