சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (16) இலங்கைக்கு வருகை தந்தனர்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையும் அதன் தாக்கத்தையும் நேரடியாகப் பார்வையிடும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை தந்திருப்பதுடன், அனர்த்தத்திற்குப் பிறகு இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
