நாடளாவிய ரீதியில் உள்ள கட்சியின் அமைப்பாளர் வலைப்பின்னலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 30 புதிய தொகுதி அமைப்பாளர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக விண்ணப்பித்த பெருமளவிலானோரில் இருந்து சிறந்த 30 பேரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யக்கூடிய, தகுதியுள்ள நபர்களையே நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
