BREAKING

வெளிநாடு

போர் முடிவுக்கு வருமா? ரஷியா-உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் தலைவர்கள்

கீவ் புறநகர் பகுதியான புச்சா பகுதி ரெயில் நிலையம் அருகே, உக்ரைன் சிறப்பு தூதுவர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதுவர்கள் அவரை சந்தித்தனர். பெப்ரவரி 2022ல் உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பின் உச்சகட்டமாக, புச்சா பகுதியில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருக்களிலும், வெகுஜன புதைகுழிகளிலும் சடலமாக கிடந்தனர். அந்த பகுதிக்கு ஆப்பிரிக்க தலைவர்கள் வருகை தந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆப்பிரிக்க தூதுக்குழுவில் ஜாம்பியா, செனகல், உகண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். தங்கள் தூதுக்குழுவுடன் தனித்தனியான சந்திப்புகளுக்கு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக ராமபோசா கடந்த மாதம் கூறியிருந்தார்.

ரஷியாவின் உயர்மட்ட சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ஆப்பிரிக்க தூதுக்குழுவினர் இன்று செல்கிறார்கள்,மற்றும் நாளை புதினைச் சந்திக்க தயாராகி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!