ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் துருக்கியில்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் துருக்கியில் இன்று இடம்பெறுகிறது.

இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சரும் துருக்கிக்கு வந்துள்ளனர். அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சேர்ந்த பேச்சுவார்த்தை பிரதிநிதிகளும் இஸ்தான்புலில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகள் கலந்துகொள்ளவில்லை. ரஷ்யாவின் தூதுக்குழுவிற்கு ஜனாதிபதி உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமை தாங்குவார.

மேலும் அமெரிக்கா ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யா போர் நிறுத்ததிற்கு உடன்படவில்லை எனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்களால் புதிய தடைகள் விதிக்கப்படவுள்ளது. நினைத்துப்பார்க்க முடியாத தடையை அமெரிக்காவால் ரஷ்யா எதிர்கொள்ளும்.

பிரான்ஸ் ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில் இந்த ஆண்டு பிரான்சில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து CAESAR 155mm howitzers ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று தொலைக்காட்சி செய்தியொன்றுக்கு கருத்துவெளியிட்டுள்ளார்.

Exit mobile version