வெடிவிபத்தில் 406 பேர் காயம்

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 406 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரச தொலைக்காட்சி தகவல் படி, எரியக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்பட்ட அலட்சியமே இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின்போது, அதிகளவில் கரும்புகை எழுந்ததை அப்பகுதியில் இருந்தோர் விடியோ பதிவு செய்தனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளது.

Exit mobile version