பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு முச்சக்கர வண்டிகளின் சேசிஸ் எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே இலக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, போலியானது எது என கண்டுபிடிப்பதற்கான முச்சக்கர வண்டிகளை அரச பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்..
விசாரணைகளில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில் பல நபர்களுக்கு சொந்தமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.