BREAKING

வெளிநாடு

பாகிஸ்தானில் தொலைபேசி சேவைகள் தற்காலிக நிறுத்தம்

பாகிஸ்தானில் தொலைபேசி சேவைகள் தற்காலிக நிறுத்தம்

பாகிஸ்தானில் நேற்று (08) நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் கையடக்க தொலைபேசி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்

இதேவேளை, புதன்கிழமை (07) மாலை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வேட்பாளர்கள் அலுவலகம் அருகே இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் .

குவெட்டா நகரின் வடக்கே உள்ள பிஷின் மாவட்டத்தில் முதல் குண்டுவெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டாவது குண்டுவெடிப்பில் கிழக்கே கிலா சைபுல்லாவில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்று இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!