BREAKING

உள்நாட்டு செய்தி

ஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (07) காலை முதல் நிலவும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச செயலகப் பிரிவு, காலி மாவட்டத்தில் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய, மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகள், யட்டியந்தோட்டை, அறம்புக்கனை, நியாகல, மாவனெல்ல, ஆகிய பகுதிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டம், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம, அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச செயலகங்களில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்தும் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் குறித்து அப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!